Tuesday, 22 May 2012

ஒற்றைரோஜாவும் ஒரு இதயமும்


அன்று ஏடன் தோட்டத்திலும் 
பின்னர் பாரசீகஅந்தப்புர பூங்காக்களிலும் 
மொகலாய ராஜபாதைகளிலும் 
பூத்துக்குலுங்கிய ரோஜாதான் 

இன்று என் வீட்டு ஜன்னல்கரையிலும் பூத்திருக்கிறது.
ஏவாள் விரும்பிக் கேட்ட 
அப்பிள் பழத்தை பறித்துகொடுத்த 
ஆதாமின் நெஞ்சுக்குள் 
துடித்துக்கொண்டிருந்ததும் 
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
வெற்றிப் புன்னகையுடன் 

பாரசீகத்தெருக்களில் நடைபோட்ட 
மகா அலெக்சாண்டரின் 
இடப்பக்கத்து மார்புக்குள் 
அடித்துக்கொண்டிருந்ததும் 

உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
ராஜபுத்திர கோட்டைகளின் மேல் 
வில்லுகளுடன் நின்றிருந்த வீரர்களின் 
காதலை சொல்லிக்கொண்டிருந்ததும் 
இன்று உனக்காகவே எனக்குள் 
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.! .

தேர்திருவிழாவின் அத்தனை கூட்டத்துக்குள்ளும் 
நீமட்டும் எனக்கு தெரிவதுபோலவே.. 
எத்தனை பூக்கூட்டத்துள்ளும் ஒரு ஒற்றை ரோஜா 
தனித்தே தெரியுமே அதைப்போலவே
என் காதலை சொல்லியபடி விரிந்திருக்கும் 
இந்த ஒற்றை ரோஜாவும்
உனக்காகவே ஏங்கிக்கிடக்கும் என் இதயமும் 
எல்லாவற்றையும் விட மேன்மையானவை
ஏனென்றால் அவை உனக்கானவை.

சுடிதார் உலகத்தில்


மூச்சுக்குள் சேமிப்பு 
உன் புன்னகைகள்
ரவிவர்ம வண்ணங்களாய்
உன் பெயரடியாய்
காதல் உயிரடியாய் ...


சத்திரத் தெரு
முச்சந்திப் பிச்சைக்காரனாய்
என் காதலெனும் யாசகத்தில்
சில்லறைச் சிரிப்புச் சிதறல்கள்

விண் வரைந்த ஓவியமாய் 
விரல் சேர்ந்த காவியமாய்
தொடரும் நடுக்கத்தில்
பதற்றத்தில் கூடவே
ஆண் வெட்கத்தில்...???

பூவையால்
என் இராத்திரிகள்
கூவைகள் அலறும்
இரவுகளாக்கப்பட்டு 
கனவில் மட்டும்
காதல்ப் போதனை
பாவையின் 
படிக்கப் படாத மனதை ....

சைவம் துறந்து
என் இதயம்
விழுங்கும் பெண்மையிடம்
சிக்கிக்கொண்டே
சிலிர்த்துக்கொண்டே
சுடிதார் உலகத்தில் நான் ...

Sunday, 13 May 2012

!!! உணர்ந்து கொள் என் உத்தமியே !!!


உணர்வை ஊக்குவிக்க அருகில் 
உண்மை நட்பிருக்க
உள்ளம் மகிழ்விக்க 
உத்தமி நீயில்லையேன்றால் 
உதறிவிடுவேன் என்று எண்ணினாயா  
உன் நினைவை உதிரம் உறையும் வரை 
உதறி விட மாட்டேன் 
உணர்ந்து கொள் என் உத்தமியே

உயிர் நீயென்றானபின் உனை மறக்கும் 
உள்ளம் எனக்கில்லை உனையே என்றும்
உண்மையாய் நேசிக்க உன்னிடத்தில் 
உரிமை கேட்கிறேன் 
உணர்ந்து கொள் என் உத்தமியே

உன் உறவுகளை நீ வெறுக்க 
உண்மைகளை நான் தேடவில்லை 
உயிராய் நான் நேசிக்கும் உன் 
உறைந்த உண்மைகளை உணர்த்தவே உன் 
உணர்வை கேட்கிறான் 
உணர்ந்து கொள் என் உத்தமியே

உருகியே கரணம் கேட்கிறாய் 
உதறிவிட உண்மை காதலை 
உதறிவிட நீ நினைப்பது உன் 
உணர்வையா இல்லை எனையா 
உண்மை எதோ நானறியேன் 
உணர்ந்து கொள் என் உத்தமியே

உயிராய் நேசித்த காதலை உதறிவிட உன் 
உள்ளம் சொல்லுமேயானால் உடனே செய்துவிடு 
உன் மகிழ்வே இவனின் விருப்பம் 
உணர்ந்து கொள் என் உத்தமியே

உளறியே தினம் தீர்க்கிறாய் காரணம் வேண்டி என்பதை 
உணர்ந்து விட்டேன் நானும் 
உடலோடு உயிர் உள்ளவரை நான் 
உதறிவிடமாட்டேன் நம் உண்மை காதலை 
உணர்ந்து கொள் என் உத்தமியே ..

தாயே நீர் ஆண்டு நூறு வாழி


கருவில் நானழுதால் 
கணத்திலவள் கண்கலங்கும் 
உதரம் நான் உதைத்த போது - தன் 
உதிரம் தந்த உத்தமியாள்
குணம் மாறா உக்களியாள்

கண்களிலே கோபமில்லை - அவள் 
பாசத்தில் பாசாங்கில்லை
நெஞ்சிலே வஞ்சமில்லை - என்னை
பிஞ்சிலே காக்கும் தெய்வக் 
குணத்திற்கோ ஈடு இல்லை

மிஞ்சினால் கொஞ்சமாய்த் தன்
அன்பிலே வஞ்சிப்பாள்
அஞ்சினால் எனைத் தூக்கி 
கொஞ்சியே பயம் தீர்ப்பாள் - நிஜக் 
காதலின் கருத்துரைப்பாள்

உண்மையினை வளர்த்திடுவாள் 
பொய்மையினை உணர்த்திடுவாள் 
காரணங்கள் சொல்லாமலே 
கண்களாலே கடிந்திடுவாள் - பின்
கரத்தினால் கனியவைப்பாள்

மீசை அரும்பும் வயதில்க் கூட
அவள் பாசம் அறுந்திடாது
சம அன்பைக் காட்டிடுவாள் - தீய
சரித்திரத்தை மாற்றி வைப்பாள் 
சஞ்சலமின்றிய சாதனையாள்

என் வெற்றிகளில் பெருமைப்படும் 
முதல்ப் பெண் நீர் - என் தோல்வி கண்டு 
சிந்திடுவீர் முதற்க் கண்ணீர் 
என் ஆயுள் தரத் தயங்க மாட்டேன் 
தாயே நீர் ஆண்டு நூறு வாழி!!

Saturday, 12 May 2012

நான் வாழ நீ வேண்டும் .......



உறவே....!!
உன்னை சிறை செய்ய நினைத்து
உன் இதயச் சிறையில் நான்
சிக்கிக் கொண்டேன்.....
இதுதான் காதல்

ஒளி  ஊடுருவிச் செல்லும் சொற்களால்
என் உயிர் ஊடுருவிச் சென்றாய்
என்னை வென்றாய்......
உன் கண்ணீர் துடைப்பேன்
என் கண்ணில் நீர்மல்க.....
உறவே! நான் வாழ நீ வேண்டும்....

என் உள்ளம் காலிக் கிண்ணம்
உன் அன்பை ஊற்றி நிரப்பு....
கல்லாகும் என் இதயம் - நீ
நுழைந்த இடத்தில் யாரும்
நுழையக் கூடாதென்று.....
இதயத்தில் பாதிப்பில்லை
பாதிப்பே இதயமாக இருப்பதனால்...
நான் வாழ நீ வேண்டும்.....

பாதியில் வந்த உறவல்ல
பாதி பாதியாக வாழ்வதற்கு...
பாதியில் விட்டு விடாதே
பருதவிக்கும் என் மனது.....
தருவேன் பெறுவேன் 
இருவருக்கும் இழப்பில்லாத
சிரிப்பு ஒன்றை.......
உறவே! நான் வாழ நீ வேண்டும்..

நீ இன்றி நான் இல்லை

 எத்தனை துணைகள் இருக்க 
அத்தனையும் விட்டுவிட்டு 
உன் துணை தேடியது எதற்காக?


பூவுக்கும் இதழ் உண்டு 
உனக்கும் இதழ் உண்டு ..
இரண்டையும் ஒன்றாக
உன்னுடத்தில் பார்கிறேன்  
உன் புன்னகை உதட்டினில் .

பக்கத்தில் நீ இருந்தால் பாவி நான்
பறிப்பதற்கு என்ன இருக்கு 
துரத்தில் இருந்துகொண்டே 
பறித்துவிட்டேன்
பல ஜென்ம பரிசு அதை .

கற்றுக்கொண்ட கல்விக்கும்
தேடிக்கொண்ட செல்வத்துக்கும்  
மதிப்பும் இல்லை - உன்னை 
பெற்றுக்கொண்ட எனக்கு
இதை விட பெரிது எதுவும் இல்லை

காதலித்த காலமும்  
கண்ணீர் வடித்த காலமும் 
கொஞ்சக்காலம் எமக்கு - இனி 
எனக்கு நீ இருப்பாய் 
உனக்கு நான் இருப்பேன் 
இதில் ஒன்று இழந்தால் 
உனக்கு முன் நான் இறப்பேன் .

பழகிப்பார்க்க இது 
புதிதான உறவும் இல்லை
பிரித்து பார்க்க இது
வெறுப்பான உடலும்  இல்லை
உன்னோடு வாழத வாழ்வு எனக்கு 
தேவையும் இல்லை 
இல்லை எனில் நாம் வாழ்ந்தும்  
நின்மதி இல்லை.



என்றுமே தொடரும்  
என் அன்புத் தொல்லைகள் ...
அதை நீ ஏற்க மறுத்தால் உனக்கு 
நிறைய தொல்லைகள் 
காற்றுக்கு அணை மரம் 
நீருக்கு அணை கட்டு ....
கடலுக்கு அணை கரை ....
என்றுமே  நீதான் 
என் வாழ்கை  துணை